வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (22/05/2017)

கடைசி தொடர்பு:12:31 (22/05/2017)

ஆசிய செஸ் போட்டியில் அதிரடி ஆட்டம்! தங்கம் வென்று அசத்திய சென்னை மாணவி

ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் சார்பில் பங்கேற்ற சென்னை மாணவி, தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

செஸ் வைசாலி

சீனாவில் நடைபெற்ற ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் ‘பிலிட்ஸ்’ பிரிவில் தங்கமும், ‘க்ளாசிக்’ பிரிவில் வெண்கலமும் வென்று சாதனை படைத்துள்ளார் சென்னையைச் சேர்ந்த வைசாலி. மொத்தம் 9 சுற்றுகள் நடைபெற்ற இந்த தொடரில் வைஷாலி 7 சுற்றுகளில் வெற்றியும், இரண்டு சுற்றுகளை டிராவும் செய்து 8 புள்ளிகளைப் பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைபற்றினார்.

நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் மங்கோலிய வீராங்கனைக்கு எதிராக விளையாடிய வைசாலி போட்டியை சமன் செய்தார். ஆனால் இதற்கு முன்னர் நடைபெற்ற போட்டிகளில் பெற்ற புள்ளிகளுடன் சேர்த்து வெற்றி பெற்றதால் தங்கம் வென்றார். இவருக்கு அடுத்ததாக மற்றொரு இந்திய வீராங்கனை பத்மினி ஏழு புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். ஆடவர் பிரிவில் தமிழக வீரர் அர்விந்த் சிதம்பரம் ஏழு புள்ளிகளுடன் ஆசிய சாம்பியன்ஷிப்பில் நான்காம் இடத்தைப் பிடித்தார்.