வெளியிடப்பட்ட நேரம்: 16:49 (22/05/2017)

கடைசி தொடர்பு:17:07 (22/05/2017)

இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி அளித்தார் பி.வி.சிந்து!

சுதிர்மன் கோப்பை பேட்மின்டன் தொடரில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்த இந்திய அணிக்கு ஆறுதல் தரும் விதமாக பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து வெற்றி பெற்றார்.

சிந்து

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சுதிர்மன் கோப்பையின் முதல் லீக் தொடரில் டென்மார்க் அணியினருக்கு எதிராக விளையாடிய இந்திய அணி 1-4 என்ற செட்கணக்கில் தோல்வி அடைந்தது. ஆறுதல் வெற்றியாக இறுதி நாளில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் விளையாடிய இந்தியாவின் பேட்மின்டன் நட்சத்திரம் சிந்து வெற்றி பெற்று இந்திய அணிக்கு ஆறுதல் அளித்தார். 

சுதிர்மன் கோப்பையில் குரூப் 1டி பிரிவில் இந்திய அணி, டென்மார்க், இந்தோனேஷியா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. முதலாவது லீக் போட்டியாக டென்மார்க் அணியினருக்கு எதிராக இந்தியா விளையாடியது. இதில் பெண்கள் இரட்டையர், ஆண்கள் ஒற்றையர், ஆண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர் என அனைத்து சுற்றுகளிலும் இந்திய அணி தோல்வியடைந்து 0-4 என்ற செட்கணக்கில் பின்தங்கி இருந்தது. இறுதியாக நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவில் விளையாடிய சிந்து டென்மார்க்கின் லின்னை 21-18, 21-6 என்ற செட்கணக்கில் சுலபமாக வீழ்த்தினார்.

இப்போட்டிகளில் இந்தியாவின் சார்பாக பி.வி.சிந்து, அஜய் ஜெய்ராம், சிக்கி ரெட்டி, அஷ்வினி பொன்னப்பா, சுமித் ரெட்டி, மானு அட்சி, சத்விக்சாய் ராஜ் ஆகியோர் பங்கேற்றனர். அடுத்ததாக இத்தொடரின் இரண்டாவது லீக் சுற்றில் இந்தோனேஷியாவை நாளை சந்திக்கவுள்ளது இந்திய அணி.