உலகப் புகழ் பெற்ற பைக் ரேசர் நிக்கி ஹேடன் விபத்தில் மரணம்..!

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் மோட்டோஜிபி சாம்பியன் நிக்கி ஹேடன் சாலை விபத்தில் உயிரிழந்தார். 

அமெரிக்காவைச் சேர்ந்த பைக் ரேசர் நிக்கி ஹேடன், அவருக்கு வயது 35. அவர் 2006-ம் ஆண்டின் மோட்டோஜிபி சாம்பியன் பட்டத்தை வென்றார். அவர் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்னர், இத்தாலி நாட்டில் விபத்துக்குள்ளானார். மே 17-ம் தேதி நிக்கி ஹேடன் இத்தாலி நாட்டின் ரிமினி கடற்கரையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர்மீது ஒரு கார் மோதியது. அந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் மௌரிஸியோ புஃபலானி என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். நிக்கி ஹேடனின் பெருமூளைப் பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த ஹேடன், இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!