வெளியிடப்பட்ட நேரம்: 17:56 (23/05/2017)

கடைசி தொடர்பு:17:56 (23/05/2017)

இங்கிலாந்து குண்டுவெடிப்பு எதிரொலி! பிசிசிஐ அவசரக் கூட்டம்

இங்கிலாந்தில் நடந்த குண்டுவெடிப்பை அடுத்து, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விவாதிக்க பிசிசிஐ அவசரக் கூட்டத்தை கூட்டியுள்ளது.

பிசிசிஐ

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் பகுதியில், அமெரிக்க பாப் பாடகி அரினா கிராண்டியின் இசைக் கச்சேரியில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 22 பேர் உயிரிழந்தனர், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஐ.எஸ் தீவிரவாதிகளால் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில் சாம்பியன்ஸ் கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணியின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விவாதிக்க பிசிசிஐ அவசரக் கூட்டத்தை கூட்டியுள்ளது. அடுத்த மாதம் இங்கிலாந்தில் 8 நாடுகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இதனிடையே இங்கிலாந்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் சங்கம் கூறுகையில், 'குண்டு வெடிப்புக்குப் பிறகு அதிகளவில் வீரர்களின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது' எனக் கூறியுள்ளனர். இதையடுத்து ஜூன் 4 ஆம் தேதி பாகிஸ்தானுடன் முதல் போட்டியில் விளையாடுகிறது இந்திய அணி.