சச்சின் திரைப்படம்... இந்திய வீரர்களுக்கு இன்று சிறப்புக் காட்சி!

மும்பையில் இன்று 'சச்சின்: எ பில்லியன் ட்ரீம்ஸ்' திரைப்படம், இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சிறப்புக் காட்சியாக திரையிடப்படுகிறது.

சச்சின்

சர்வதேச கிரிக்கெட்டின் சாதனை நாயகன் சச்சினின் வாழ்க்கையைத் தழுவி 'சச்சின்: எ பில்லியன் ட்ரீம்ஸ்' திரைப்படம் உருவாகியுள்ளது. ஜேம்ஸ் எர்கின்சன் இயக்கியுள்ள இத்திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். மே 26ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகவுள்ளது. அனைத்து தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்ட சச்சினை திரையில் பார்க்க ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் ஆவலுடன் உள்ளனர்.

இதனிடையே இன்று பிற்பகல் சச்சின் திரைப்படத்தின் சிறப்புக் காட்சி மும்பையில் திரையிடப்படுகிறது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, தவான் உள்ளிட்ட வீரர்கள் இந்த சிறப்புக் காட்சியை காணவுள்ளனர். இதையடுத்து இரவு 7 மணிக்கு தொடங்கும் மற்றொரு காட்சியை சச்சினின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் காண்கின்றனர். அண்மையில் விமானப் படையினருக்கு சச்சின் திரைப்படம் பிரத்யேகமாக திரையிடப்பட்டது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!