மெஸ்ஸிக்கு 21 மாதங்கள் சிறைத் தண்டனை! ஸ்பெயின் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு 21 மாதங்கள் சிறைத் தண்டனையை ஸ்பெயின் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

மெஸ்ஸீ

உலகப் புகழ்ப்பெற்ற கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி பார்சிலோனா மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்காக விளையாடி வருகிறார். உலகம் முழுவதும் இவருக்குப் பெரும் ரசிகர் பட்டாளம் உண்டு. இதனிடையே கடந்தாண்டு, மெஸ்ஸி வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது. 4 மில்லியன் யூரோ அளவில் இவர் வரி ஏய்ப்பு செய்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்து, ஸ்பெயின் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அவருக்குச் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது.

நீதிமன்றத்தால் தண்டனை அளிக்கப்பட்டவுடன் தீர்ப்பை எதிர்த்து மெஸ்ஸி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இன்று மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஸ்பெயின் உச்சநீதிமன்றம், தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது. இதனிடையே 2 ஆண்டுகளுக்குக் குறைவாக தண்டனை பெற்றிருந்தால் சிறை செல்ல வேண்டாம் என ஸ்பெயினில் சட்டம் இருப்பதால் சிறை செல்வதிலிருந்து தப்பியுள்ளார் மெஸ்ஸி.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!