இங்கிலாந்து சென்றது இந்திய அணி... 2 வீரர்கள் மட்டும் செல்வதில் தாமதம்!

சாம்பியன்ஸ் கோப்பையில் விளையாட இங்கிலாந்துக்குச் சென்றுள்ள இந்திய அணியில் ரோஹித் ஷர்மா மற்றும் கேதர் ஜாதவ் இடம்பெறவில்லை.

rohit

இங்கிலாந்தில் வேல்ஸில் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த கிரிக்கெட் தொடர் ஜூன் 1ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நடப்பு சாம்பியனான இந்தியா முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடுகிறது. இத்தொடரில் பங்கேற்கும் இந்திய அணி நேற்று சச்சின் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்துவிட்டு இங்கிலாந்து கிளம்பியது.

இதனிடையே இங்கிலாந்து சென்ற இந்திய அணியுடன் ரோஹித் ஷர்மா மற்றும் கேதர் ஜாதவ் செல்லவில்லை. உறவினர் ஒருவரது திருமணம் நடைபெறவுள்ளதால், தாமதமாக வருவதற்கு ரோஹித் ஷர்மா பி.சி.சி.ஐ.யிடம் அனுமதி கேட்டுள்ளார். இதையடுத்து, அவர் நேற்று இந்திய அணியுடன் செல்லவில்லை. மற்றொரு வீரரான கேதர் ஜாதவுக்கு குறிப்பிட்ட நேரத்தில் விசா கிடைக்காததால் அவரது பயணமும் தடைப்பட்டுள்ளது. தற்போது அவருக்கும் விசா கிடைத்துள்ளது. இதையடுத்து நாளை இரு வீரர்கள் இங்கிலாந்து செல்லவுள்ளனர். மேலும் 28 ஆம் தேதி நியூசிலாந்து இடையே நடக்கும் பயிற்சி ஆட்டத்தில் இருவரும் பங்கேற்பார்கள் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!