வெளியிடப்பட்ட நேரம்: 17:53 (25/05/2017)

கடைசி தொடர்பு:18:23 (25/05/2017)

பெற்றோர்களுக்கு சச்சின் முக்கிய வேண்டுகோள்!

'உங்கள் ஆசைகளை என்றும் உங்கள் குழந்தைகள் மீது திணிக்காதீர்கள்’ என பெற்றோர்களுக்கு சச்சின் டெண்டுல்கர் அறிவுரை வழங்கியுள்ளார்.

சச்சின்

சச்சின் வாழ்க்கை வரலாறு குறித்தத் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், அதுகுறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் சச்சின் டெண்டுல்கர் பேசினார்.  அப்போது அவர் கூறுகையில், ‘பெற்றோர்களின் ஆசையை குழந்தைகள் மீது திணிக்காதீர்கள். குழந்தைகளை எப்போதும் சுதந்திரமாகச் செயல்படவிடுங்கள். என் ஆசைகளை ஒருபோதும் என் குழந்தைகள் மீது திணித்ததில்லை. அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்களோ, அதுவே என் விருப்பம்’ என்றார்.

மேலும், தன்னைக் குறித்த திரைப்படம் வெளியாவது குறித்து சச்சின் கூறியபோது, ‘என் திரைப்படத்தின் மூலம் நான் கூறவருவது ஒரு விஷயம்தான். என் தந்தை எவ்வித எதிர்பார்ப்புகளும் இன்றி என்னை கிரிக்கெட் விளையாட அனுமதித்தார். நானும் எவ்வித எதிர்பார்ப்புகளும் இன்றியே கிரிக்கெட் விளையாடினேன். ஆனால் பிடித்து விளையாடினேன். அதனாலேயே வெற்றி பெற முடிந்தது. இதையே நான் மற்ற பெற்றோர்களுக்கும் கூற விரும்புகிறேன்’ என்றார்.