வெளியிடப்பட்ட நேரம்: 21:39 (25/05/2017)

கடைசி தொடர்பு:08:38 (26/05/2017)

கும்ப்ளேவுக்கு பைபை... விரைவில் இந்திய அணிக்குப் புதிய பயிற்சியாளர்!

இந்திய கிரிக்கெட் அணிக்குப் புதிய பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் இறங்கியுள்ளது பி.சி.சி.ஐ. இதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

kumble

இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ரவி சாஸ்திரியின் பதவி, கடந்த டி20 உலகக் கோப்பையோடு முடிவடைந்தது. இதையடுத்து புதிய பயிற்சியாளராக அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டார். கங்குலி, சச்சின், லட்சுமணன் உள்ளிடோர் அடங்கிய குழு கும்ப்ளேவை பயிற்சியாளராகத் தேர்வு செய்தது. இதையடுத்து கடந்த ஒரு வருடமாக அவர் இந்திய அணியின் பயிற்சியாளராக பணியாற்றினார்.

இந்நிலையில், புதிய பயிற்சியாளரை நியமிக்கும் பணியில் இறங்கியுள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம். தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என பி.சி.சி.ஐ தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்த மாதம் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்து நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் கோப்பைத் தொடருடன் கும்ப்ளேவின் பதவிக் காலம் முடிவதனால், புதிய பயிற்சியாளரைத் தேர்ந்தெடுப்பதாக பி.சி.சி.ஐ தரப்பில் கூறப்படுகிறது.