வெளியிடப்பட்ட நேரம்: 05:23 (26/05/2017)

கடைசி தொடர்பு:07:51 (26/05/2017)

டி20 போட்டிகளிலும் டி.ஆர்.எஸ் முறை நடைமுறைப்படுத்தப்படுமா? #T20

நடுவர்களின் தீர்ப்பை மறுபரிசீலனைசெய்யும் டி.ஆர்.எஸ் முறையை டி20 போட்டிகளிலும் அமல்படுத்த சர்வதேச கிரிக்கெட் குழு பரிந்துரைசெய்துள்ளது. 


சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தொழில்நுட்பக் குழுவின் வருடாந்திரக் கூட்டம் லண்டனில் நடைபெற்றது. இந்தக் குழுவுக்கு, அனில் கும்ளே தலைமைதாங்கினார். இந்தக் கூட்டத்தில், கிரிக்கெட் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள்குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் முக்கியமானதாக, நடுவர்களின் தீர்ப்பை மறுபரிசீலனைசெய்யும் டி.ஆர்.எஸ் முறையை டி20 போட்டிகளிலும் அமல்படுத்துவதுகுறித்து பரிந்துரைசெய்யப்பட்டது. மேலும், இந்தக் கூட்டத்தில் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டியைச் சேர்ப்பது, ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் வீரர்களைக் களத்திலிருந்து வெளியேற்றும் அதிகாரத்தை நடுவருக்கு வழங்குவதுகுறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் அனில் கும்ளே, ராகுல் டிராவிட், மஹேலா ஜெயவர்த்தனே, டேரன் லீமென், ஷான் பொல்லாக்  உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கலந்துகொண்டனர்.