'இவர்கள்தான் தோனியின் சுமையைக் குறைத்தார்கள்' - கோலி

சாம்பியன் ட்ராஃபியில் விளையாடுவதற்காக, இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி, தனது பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்த்து விளையாட உள்ளது. குறிப்பாக, நடப்புச் சாம்பியன் என்ற கௌரவத்துடன் களமிறங்க உள்ளது, இந்திய அணி. 

 

Kholi

இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களிடம் கூறுகையில், "கடைசி நிலை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் பங்களிப்பை வலுப்படுத்தவேண்டிய தேவை நமக்குள்ளது. கடந்த இரண்டாண்டுகளாக, தோனிமீது அதிகளவிளான சுமைகள் இருந்ததாக நான் நினைக்கிறேன். இதனால், தன்னை அவரால் முற்றிலுமாக வெளிக்கொண்டு வர முடியவில்லை. 


ஏனென்றால், அவருடன் இணைந்து அணியை வெற்றிக்குக் கொண்டுசெல்லக்கூடிய வீரர்கள் இல்லை. ஆனால், கேதர் ஜாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர், அந்த இடத்தில் நமக்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறார்கள். இதனால், தோனியின் சுமை குறைந்துள்ளது. 
எங்களின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். பேட்ஸ்மேன்களும் சிறப்பாக விளையாடிவருகிறார்கள்.

சிறந்த ஆல் ரவுண்டர்களைப் பெற்றுள்ளோம். இந்தத் தொடருக்கான சிறந்த அணியாக நாங்கள் உள்ளோம். இங்கிலாந்தில் விளையாடுவது எப்போதும் சவால்தான். ஆனால், அந்தச் சவாலை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம்" என்று கூறினார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!