சுதிர்மன் பேட்மின்டன் கோப்பை: இந்தியா அதிர்ச்சித் தோல்வி!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவந்த சுதிர்மன் பேட்மின்டன் போட்டியின் காலிறுதியில் இந்தியா மோசமான தோல்வியைப் பதிவு செய்துள்ளது.

அஷ்வினி பொன்னப்பா

சுதிர்மன் பேட்மின்டன் கோப்பைக்கான காலிறுதிப்போட்டி, இன்று ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், சீனாவுக்கு எதிரான கலப்பு இரட்டையரில் இந்தியா 0-3 என்ற செட் கணக்கில் பரிதாபமான தோல்வியைச் சந்தித்தது. சீனாவுக்கு எதிரான இந்தக் கலப்பு இரட்டையரில், இந்தியாவின் சார்பாக அஷ்வினி பொன்னப்பா- சாத்விக்சாய்ராஜ் ஜோடி போட்டியிட்டது. உலகத் தர வரிசையில் இரண்டாம் இடத்திலுள்ள சீனாவின் லூ காய்- ஹுவாங் ஜோடியை எதிர்கொண்டது. 

முதல் செட்டை, 16-21, 21-13, 21-16 என இழந்த இந்திய அணி, இரண்டாம் செட்டையும் 16-21, 17-21 என்ற கணக்கில் இழந்தது. வெற்றியாலரை நிர்ணயிக்க நடத்தப்பட்ட இறுதிப் போட்டியில், 9-21, 11-21 என்ற மோசமான செட்டுடன் ஆட்டத்தை 0-3 என இந்தியா இழந்தது.

அடுத்தடுத்த போட்டிகளில், பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் பி.வி.சிந்து மற்றும் பெண்கள் இரட்டையர் போட்டிகளும் நடக்க உள்ளது. சுதிர்மன் கோப்பைக்கான போட்டியில் இந்தியாவுக்கான இடம்குறித்து, அடுத்து வரும் போட்டிகள் தீர்மானிக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!