’மனைவியால் தவறவிட்டுட்டேன்...’: ட்வீட் தட்டிய சேவாக்..?

ட்விட்டரில் எப்போதும் ஒன்றியே இருக்கும் பிரபலங்களுள், கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்கும் ஒருவர். சமீபத்திய ஒரு ட்வீட்டில் தன் மனைவியால் தான் தவறவிட்ட ஒரு தருணம் குறித்து நகைச்சுவையாகப் பகிர்ந்துள்ளார்.

சேவாக்


சமீபத்தில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் வாழ்க்கை வரலாறு குறித்த ’சச்சின்: ஏ பில்லியன் ட்ரீம்ஸ்’ என்ற திரைப்படம் வெளியாகி கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி அத்தனை பேரையும் கவர்ந்துள்ளது. இந்தத் திரைப்படத்தின் பிரிமியர் ஷோ என்னும் சிறப்புக் காட்சி கிரிக்கெட் வீரர்களுக்காக மட்டும் என இரண்டு நாள்களுக்கு முன்னர் திரையிடப்பட்டது. 

சச்சின் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை தோனி, விராட் கோலி என இந்திய கிரிக்கெட் வீரர்கள் அவரவர் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் இணைந்து பார்த்தனர். இங்கிலாந்து தொடருக்காகப் பயணப்பட வேண்டிய கட்டாயம் இருந்தபோதிலும் இந்திய அணியினர் படம் பார்த்த பின்னரே சென்றனர்.

இந்நிலையில், இந்த பிரிமியர் ஷோவில் சேவாக் பங்கேற்கவில்லை. சச்சின் - சேவாக் கூட்டணி இந்திய அணிக்கு பல வெற்றிகளைத் தந்தவர்கள். சச்சின் படம் பார்க்க முடியாதது குறித்து ட்விட்டரில் வீடியோவுடன் கருத்து பதிந்துள்ளார் சேவாக். அதில், ‘கடவுள் என்னை சச்சின் படம் பார்க்க அழைத்தார். ஆனால், மனைவி விடுமுறைக்கு அழைத்துச் சென்றுவிட்டார். நிவேதனம் கொடுத்து கடவுளை சரிகட்டிவிடலாம். ஆனால், மனைவியை சமாளிக்க முடியாதே’ என நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், இந்தத் திரைப்படம் சிறுவர்களுக்கான சிறந்த தூண்டுகோலான படமாக இருக்கும். அனைவரும் இத்திரைப்படத்தை பாருங்கள். நானும் அவசியம் பணம் கொடுத்து திரையரங்கில் பார்ப்பேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!