வெளியிடப்பட்ட நேரம்: 00:07 (28/05/2017)

கடைசி தொடர்பு:00:53 (28/05/2017)

சாம்பியன்ஸ் டிராபிக்கு லாராவின் சாய்ஸ் யார் தெரியுமா?

Brian Lara\

வரும் ஜூன் 1-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்க உள்ளது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர். நடப்பு சாம்பியன் இந்தியா, இம்முறையும் கோப்பையை வெல்ல முனைப்போடு இருக்கிறது. அதைப்போலவே நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா என பல சர்வதேச அணிகளும் டாப் ஃபார்மில் உள்ளன. இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் ப்ரெய்ன் லாரா, 'இம்முறை சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல இங்கிலாந்துக்கு வாய்ப்புள்ளது' என்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும், 'என்னளவில் 2004-ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி என்பது, என் கெரியருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இம்முறை நடக்கவுள்ள தொடர், இதுவரை இல்லாத அளவுக்கு பெரிதாகவும் சிறப்பாகவும் இருக்கப் போகிறது. இந்தத் தொடர் பார்ப்பதற்கு ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். இங்கிலாந்திலேயே நடப்பதாலும் அந்த அணி மிகவும் நல்ல ஃபார்மில் உள்ளதாலும், அவர்கள் கோப்பை வெல்ல வாய்ப்பு நிறைய இருக்கிறது.' என்று கூறியுள்ளார்.

இந்தத் தொடரின் முதல் போட்டி, ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து - பங்களாதேஷ் அணிக்கு இடையில் நடக்கிறது. 2013-ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி, இந்திய அணியிடம் 5 ரன்களில் தோற்று கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பை தவறவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.