சாம்பியன்ஸ் டிராபி : யுவராஜ் சிங்குக்கு காய்ச்சல்!

ஐபிஎல் ஃபீவர் முடிந்துள்ள நிலையில், இங்கிலாந்தில் வருகின்ற ஜூன் 1-ம் தேதி, சாம்பியன்ஸ் டிராபி தொடங்க உள்ளது. நடப்பு சாம்பியன் இந்திய அணி, இம்முறை கோலி தலைமையில் களமிறங்க உள்ளது. அதேபோல், ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகளும் கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்குகின்றன.

Yuvraj


இதற்கிடையே, தற்போது அங்கு பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகிறது. இந்தியா அணி, இன்று தனது பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியுடன் மோத உள்ளது. இதை முன்னிட்டு, நேற்று இந்திய வீரர்கள் நெட் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது, தோனி, கோலி ரஹானே உள்ளிட்டோர் நெட் பயிற்சி செய்த புகைப்படங்களை, பி.சி.சி.ஐ ட்வீட் செய்தது.


இந்நிலையில், யுவராஜ் சிங் நேற்றைய நெட் பயிற்சியில் கலந்து கொள்ளவில்லை. காய்ச்சல் காரணமாக அவர் பயிற்சியில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. சாம்பியன்ஸ் டிராபியில், ஜூன் 4-ம் தேதி நடக்கும் தனது முதல் போட்டியில், இந்தியா, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. அணியின் முக்கிய ஆல் ரவுண்ராக கருதப்படும் யுவராஜ், அதற்கு முன் ஃபிட்டாக வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!