வெளியிடப்பட்ட நேரம்: 18:09 (28/05/2017)

கடைசி தொடர்பு:18:09 (28/05/2017)

சாம்பியன்ஸ் டிராபி பயிற்சி ஆட்டம்: இந்தியாவுக்கு 190 ரன்கள் இலக்கு

icc

சாம்பியன்ஸ் டிராபிக்கான பயிற்சி ஆட்டங்கள் இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்றன. இன்றைய பயிற்சி போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், நியூஸிலாந்தும் மோதி வருகின்றன. கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. விராட் கோலி தலைமையில் இந்திய அணியும், வில்லியம்சன் தலைமையில் நியூஸிலாந்து அணியும் மோதுகின்றன.

இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். 50 ஓவர்கள் கொண்ட போட்டியில் களமிறங்கிய நியூஸிலாந்து ஆரம்பம் முதலே திணறியது. கப்டில் 9 ரன்கள், கேப்டன் வில்லியம்சன் 8 ரன்கள், ப்ரூம் 0 ரன்களில் தொடக்கத்திலேயே ஆட்டமிழந்தனர். லூக் ரோன்ச்சி நிலைத்து நின்று ஆடி 66 ரன்கள் எடுத்தார். நீஷம் ஆட்டமிழக்காமல் 45 ரன்கள் எடுத்தார். இறுதியில் 38.4 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன்கள் எடுத்துள்ளது நியூஸிலாந்து.

இந்திய தரப்பில் ஷமி, புவனேஷ்வர் குமார் தலா மூன்று விக்கெட்டுகளையும், ஜடேஜா 2 விக்கெட்டுகளையும், அஷ்வின், உமேஷ் யாதவ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிறது இந்திய அணி.

Pic Courtesy: ICC