மொனாக்கோ ஃபார்முலா-1 பந்தயத்தை வென்றார் செபாஸ்டியன் வெட்டல்!

செபாஸ்டியன் வெட்டல்

மொனாக்கோவில் நடைபெற்ற ஃபார்முலா-1 க்ராண்ட் ப்ரீ கார் பந்தயத்தை ஃபெராரியின் செபாஸ்டியன் வெட்டல் வெற்றி பெற்றார். இரண்டாம் இடத்திலும் ஃபெராரி நிறுவனத்தின் கார் பந்தய ஓட்டுநரான கிமி ரெய்க்கணன் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் போட்டியில், ஃபெராரி நிறுவனத்தின் இரண்டு ஓட்டுநர்கள் முதல் இரண்டு இடத்தில் வந்த போதும், ரெய்க்கணனுக்கு பந்தயத்தை ஜெயிக்க வாய்ப்பு இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், வேண்டுமென்றே ஃபெராரி நிறுவனம், வெட்டலை ஜெயிக்க வைத்ததாக கூறப்படுகிறது. இதற்குக் காரணம், வெட்டலுக்கு ரெயிக்கணனுக்கு இருப்பதைவிட ஒட்டுமொத்த புள்ளிகள் அதிகமாக இருப்பதே எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது ஃபெராரி நிறுவனம். 

இந்த பந்தயத்தை அடுத்து வெட்டல், 'இந்த வெற்றியை உண்மையில் என்னால் நம்ப முடியவில்லை. ஆனால், மிகவும் பதற்றம் நிறைந்த பந்தயங்களில் இதுவும் ஒன்று. எனக்கு பந்தயத்தில் வெற்றி பெற ஒரேயொரு வாய்ப்புதான் கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு, இறுதி வரை தக்கவைத்துக் கொண்டேன்' என்று கூறியுள்ளார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!