வெளியிடப்பட்ட நேரம்: 23:38 (28/05/2017)

கடைசி தொடர்பு:10:57 (29/05/2017)

சாம்பியன்ஸ் கோப்பை: நியூஸிலாந்தை வீழ்த்திய இந்திய அணி!

இன்று நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை பயிற்சி ஆட்டத்தில், நியூஸிலாந்தை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது  இந்திய அணி.

இந்தியா

இங்கிலாந்தில், ஜூன் 1 முதல் சாம்பியன்ஸ் கோப்பைத் தொடர் நடைபெறுகிறது. இதன் பயிற்சி ஆட்டத்தில், இந்திய அணி இன்று நியூஸிலாந்தை எதிர்த்து விளையாடியது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து, பேட்டிங்கைத் தேர்வுசெய்து 38.4 ஓவர்களில் 189 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, 26 ஓவர்களில் 129 ரன்கள் குவித்தது. அப்போது மழை குறுக்கிட்டதால், ஆட்டம் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, 'டக்வொர்த் லூயிஸ்' முறைப்படி இந்திய அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்திய அணியில், கேப்டன் விராத் கோலி 52 ரன்களும் தோனி 17 ரன்களும் குவித்து, ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து, செவ்வாய் அன்று நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில், வங்கதேசத்தை எதிர்த்து விளையாடுகிறது, இந்தியா.