வெளியிடப்பட்ட நேரம்: 10:47 (29/05/2017)

கடைசி தொடர்பு:13:08 (29/05/2017)

சர்வதேச வாள்வீச்சில் இந்தியாவுக்கு முதல் தங்கம்: அசத்திய தமிழக வீராங்கனை!

சர்வதேச வாள்வீச்சுப் போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்று தங்கம் வென்று அசத்தியிருக்கிறார், தமிழக வீராங்கனை பவானி தேவி.

வாள்வீச்சு


இந்தியாவின் முன்னணி வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி, தேசிய அளவிலும் ஆசிய அளவிலும் பல பதக்கங்களைக் கைப்பற்றியவர். சென்னையைச் சேர்ந்தவரான இவர், முதன்முறையாக சர்வதேச வாள்வீச்சில் தங்கம் வென்றுள்ளார். ஐஸ்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச ’டர்னாய் சாட்டிலைட் வாள்வீச்சு’ப் போட்டியில், ‘சேஃபர்’ பிரிவில் தங்கம் வென்றுள்ளார். நேற்று முன்தினம் நடந்த இறுதிப் போட்டியில், இங்கிலாந்து வீராங்கனை சாரா ஹம்சனை எதிர்த்து விளையாடினார். இறுதிச்சுற்றில் 15-13 என்ற கணக்கில் ஹம்சனை வீழ்த்தியவர்,  தங்கப்பதக்கம் கைப்பற்றி அசத்தினார்.

உலக அளவில் நடைபெற்ற வாள்வீச்சுப் போட்டியில், இந்தியா பெறும் முதல் தங்கப்பதக்கம் இது. இதற்கு முன்னர் நடந்த இதே சாட்டிலைட் போட்டியில், இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் பெற்றுத்தந்தவர் பவானி தேவி என்பது குறிப்பிடத்தக்கது.