பயிற்சி ஆட்டம் : பங்களாதேஷ் அணிக்கு 325 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா...!

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்காக, இந்திய அணி இங்கிலாந்துக்குச் சென்றுள்ளது. ஜூன் 1-ம் தேதி சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடங்குகிறது. ஜூன் 4-ம் தேதி நடைபெறவுள்ள தனது முதல் போட்டியில், இந்திய அணி தனது பரம எதிரியான பாகிஸ்தானுடன் மல்லுக்கட்டுகிறது.

Dinesh Karthik

இதற்கிடையே, தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகிறது. இந்தியா, தனது முதல் பயிற்சி ஆட்டத்தில், நியூஸிலாந்தை வீழ்த்தியது. இந்நிலையில், இன்று நடைபெற்றுவரும் இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - பங்களாதேஷ் அணிகள் மோதி வருகின்றன. இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் இந்தப் போட்டி நடந்து வருகிறது. இந்திய அணி முதலில் பேட் செய்தது. பயிற்சி ஆட்டம் என்பதால், அணியிலிருந்தும் கேப்டன் கோலி மற்றும் தோனி ஆகியோர் பேட் செய்யவில்லை. ரோஹித் ஷர்மா, தவான் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஷர்மா ஒரு ரன்னில் பெவிலியன் திரும்பினார். தவான் 60 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இந்திய அணியில் அதிகபட்சமாக, தினேஷ் கார்த்திக் 97, ஹர்த்திக் பாண்டியா 80 ரன்கள் எடுத்தனர். இதனால் 50 ஓவர்கள் முடிவில், இந்திய அணி ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 324 ரன்கள் எடுத்தது. பங்களாதேஷ் தரப்பில் உசைன் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து, 325 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், பங்களாதேஷ் அணி களமிறங்க உள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!