பேட்டிங், பௌலிங், அணி பட்டியல்... முதலிடத்தில் தென் ஆப்ரிக்கா! | South Africa occupies top spots in ICC ODI rankings

வெளியிடப்பட்ட நேரம்: 21:59 (30/05/2017)

கடைசி தொடர்பு:07:42 (31/05/2017)

பேட்டிங், பௌலிங், அணி பட்டியல்... முதலிடத்தில் தென் ஆப்ரிக்கா!

சர்வதேச கிரிக்கெட் கமிட்டியான ஐ.சி.சி, ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் தென் ஆப்ரிக்காவின் காகிசோ ரபடா முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவர் சக வீரரான இம்பரான் தாஹிரை இரண்டாம் இடத்துக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

1998 ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஸ்தக்குக்கு 22 வயதானபோது, பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் பிடித்தார். அதன் பிறகு இப்போதுதான் 22 வயதாகும் கிரிக்கெட் வீரர் ஒருவர், பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ள சம்பவம் நடந்துள்ளது. 

இங்கிலாந்துக்கு எதிராக நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் 20 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தியதால்தான் ரபடா, டக்கென்று டாப் ஸ்பாட்டுக்கு எகிறியுள்ளார். 

பேட்ஸ்மேன்களைப் பொறுத்தவரை, தென் ஆப்ரிக்காவின் டிவில்லியர்ஸ் முதலிடத்தில் உள்ளார். அணிகள் தரவரிசைப் பட்டியலிலும் தென் ஆப்ரிக்காதான் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகின்றது.