வெளியிடப்பட்ட நேரம்: 17:46 (31/05/2017)

கடைசி தொடர்பு:20:43 (31/05/2017)

உலகின் டாப் 100 விளையாட்டு வீரர்கள்... கோலி, தோனி எந்த இடம் தெரியுமா?

இ.எஸ்.பி.என் நிறுவனம் ஆண்டுதோறும் உலகளவில் டாப் 100 விளையாட்டு வீரர்கள் பட்டியலைத் தயாரித்து வெளியிடுகின்றது. இதில் தற்போதைய இந்திய கேப்டன் விராட் கோலி, முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திரசிங் தோனி, ஸ்டார் பேட்ஸ்மேன் யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்தப் பட்டியலில் விராட் கோலி 13-வது இடத்திலும், தோனி 15-வது இடத்திலும், யுவராஜ் 90-வது இடத்திலும், ரெய்னா 95-வது இடத்திலும் உள்ளனர். முதலிடத்தில் உலகின் முன்னணி கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, இரண்டாவது இடத்தில் கூடைப்பந்து வீரர் லெப்ரான் ஜேம்ஸ், மூன்றாவது இடத்தில் கால்பந்து வீரர் மெஸ்ஸியும் உள்ளனர். 

வீரர்கள் சம்பாதிக்கும் பணம், சமூக வலைதளங்களில் அவர்களுக்கு இருக்கும் வீச்சு மற்றும் இன்னும் சில தரவுகள் அடிப்படையில்தான் இந்தப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.