வெளியிடப்பட்ட நேரம்: 06:10 (01/06/2017)

கடைசி தொடர்பு:07:59 (01/06/2017)

சாம்பியன்ஸ் கோப்பை: வங்கதேசத்தை எதிர்கொள்ளும் இங்கிலாந்து

இன்று நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை முதல் ஆட்டத்தில், இங்கிலாந்து அணி வங்கதேசத்தை எதிர்த்து விளையாடுகிறது.

இங்கிலாந்து

'மினி உலகக் கோப்பை' என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை தொடர், இன்று இங்கிலாந்தில் தொடங்குகிறது. நடப்பு சாம்பியனான இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 8 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றன. 8 அணிகளும் ஏ,பி என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் இங்கிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகளும் பி பிரிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

இதனிடையே, இன்று லண்டனில் நடைபெறும் முதல் போட்டியில், இங்கிலாந்து வங்கதேசத்தை எதிர்த்து விளையாடுகிறது. தென் னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை வென்ற உற்சாகத்தில், இங்கிலாந்து அணி களமிறங்குகிறது. பயிற்சி ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ள வங்கதேச அணியும் வெற்றிபெறும் முனைப்பில் களமிறங்குகிறது. இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க உள்ளது.