வெளியிடப்பட்ட நேரம்: 06:10 (01/06/2017)

கடைசி தொடர்பு:07:54 (01/06/2017)

ஃப்ரெஞ்ச் ஓப்பன்: 3-வது சுற்றில் நடால், ஜோக்கோவிச்!

ஃப்ரெஞ்ச் ஓப்பன் டென்னிஸ் போட்டியில், ஸ்பெயினின் ரஃபேல் நடால் மற்றும் செர்பியாவின் ஜோக்கோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

நடால்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஃப்ரெஞ்ச் ஓப்பன் டென்னிஸ் போட்டி பாரீஸில் நடைபெற்றுவருகிறது. இதில் நடால், ஜோக்கோவிச், வீனஸ் வில்லியம்ஸ் உள்ளிட்ட பிரபல வீரர்கள் பங்கேற்றுவருகின்றனர். இதனிடையே, நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வெற்றிபெற்ற ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால், 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

நெதர்லாந்து வீரர் ராபின் ஹேசியை 6-1, 6-4, 6-3 என்ற நேர் செட்டுகளில் வீழ்த்தினார் நடால். மற்றொரு போட்டியில், போர்ச்சுக்கல் வீரர் ஜோ சௌசாவை ஜோக்கோவிச் வீழ்த்தி, 3-வது சுற்றுக்குள் நுழைந்தார். மகளிர் ஒற்றையர் பிரிவில் முகுருசாவும் வீனஸ் வில்லியம்ஸும் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். ஆடவர் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் போப்பண்ணா- உருகுவேயின் பாப்லோ கியூவாஸ் ஜோடி வெற்றிப்பெற்றுள்ளது.