வெளியிடப்பட்ட நேரம்: 14:43 (01/06/2017)

கடைசி தொடர்பு:14:59 (01/06/2017)

பிசிசிஐ நிர்வாகிகள் குழுவிலிருந்து ராமச்சந்திர குஹா விலகல்?

பிசிசிஐ-யின் நிர்வாகிகள் குழுவிலிருந்து விலகுவதாக, வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா தெரிவித்துள்ளார். 


இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பாக, நீதிபதி லோதா தலைமையில் உச்சநீதிமன்றம் குழு ஒன்றை அமைத்தது. லோதா குழுவின் பரிந்துரையின் பெயரில், ஜனவரி 30 ஆம் தேதி பிசிசிஐ-க்கு நிர்வாகிகளை உச்சநீதிமன்றம் நியமனம் செய்தது. அதன்படி, இந்திய அரசின் ஆடிட்டர் வினோத்ராய், பிசிசிஐ-யின் தலைவராக நியமிக்கப்பட்டார். மேலும், ராமச்சந்திர குஹா உள்ளிட்ட நான்கு நிர்வாகிகளை பிசிசிஐ-க்கு உச்சநீதிமன்றம் நியமனம் செய்தது.

தற்போது, தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த நிர்வாகிகள் குழுவிலிருந்து விலகுவதாக, வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா தெரிவித்துள்ளார். மேலும், இதுதொடர்பாக இரு தினங்களுக்கு முன்னரே வினோத் ராய்க்கு கடிதம் அனுப்பியுள்ளதாக, உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 'பிசிசிஐ நிர்வாகிகள் குழுவிலிருந்து விலகுவதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். அந்த மனு, ஜூலை 14 ஆம் தேதி விசாரணைக்கு வரும்' என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கிரிக்கெட் போட்டிகள் தொடர்பாக, பிசிசிஐ முக்கியமான முடிவுகள் எடுக்கவிருந்த நிலையில், நிர்வாகிகள் குழுவிலிருந்து விலகுவதாக, ராமச்சந்திர குஹா தெரிவித்துள்ளார்.