வெளியிடப்பட்ட நேரம்: 19:12 (01/06/2017)

கடைசி தொடர்பு:21:30 (01/06/2017)

#ChampionsTrophy- இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 305 ரன்கள் குவித்தது வங்காள தேசம்!

கிரிக்கெட்டின் 'மினி உலகக் கோப்பை' என்று அழைக்கப்படும் 'சாம்பியன்ஸ் ட்ராஃபி' போட்டி இன்று இங்கிலாந்திலுள்ள ஓவல் மைதானத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் தாய் மண்ணில் விளையாடும் இங்கிலாந்தை, வங்காள தேசம் எதிர்கொண்டது.

இந்தப் போட்டிக்கான டாஸை வென்ற இங்கிலாந்து, வங்காள தேசத்தைப் பேட்டிங் ஆடச் சொல்லி அழைத்தது. இதையடுத்து, முதல் இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்று முனைப்போடு களமிறங்கியது வங்காள தேசம். அந்த அணியின் தொடக்க வீரரான தமீம் இக்பால் நிதானமாக விளையாடி 142 பந்துகளுக்கு 128 ரன்கள் குவித்து, மிகப்பெரும் ஸ்கோரை எட்ட துணையாக இருந்தார். இவரைத் தவிர விக்கெட் கீப்பரான முஷ்ஃபிகர் ரஹீம், அதிரடியாக விளையாடி 72 பந்துகளுக்கு 79 ரன்கள் எடுத்தார். இவர்களைத் தவிர அணியில் யாரும் நின்று ஆடவில்லை. ஆயினும், 50 ஓவர்கள் முடிவில் வங்காள தேச அணி 6 விக்கெட்டுகளை இழந்து 305 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் லியாம் ப்ளன்கெட், 10 ஓவர்கள் வீசி 59 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

இதையடுத்து, இங்கிலாந்து அணி 306 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியுள்ளது. இம்முறை கோப்பையை வெல்லும் கனவோடு களம் கண்டுள்ளது இங்கிலாந்து.