இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக விரும்பும் சேவாக்...!

விரேந்தர சேவாக்

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய பயிற்சியாளராக இருப்பவர், முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே. அவரது பதவிக் காலம் தற்போது நடந்து வரும் சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருடன் முடிவடைகிறது. எனவே பிசிசிஐ, அடுத்த பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. 

ஆஸ்திரேலியாவின் டாம் மூடி, இங்கிலாந்தின் ரிச்சர்டு பிபஸ், இந்திய 'ஏ' அணியின் பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புட் என்ற பலரும் இந்த முறை இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் அனைவரையும் ஆச்சர்யத்துக்குள் ஆழ்த்தியது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விரேந்தர் சேவாக், இந்த பதவிக்கு விண்ணப்பித்ததுதான். 

முன்னவர்கள் போன்று சேவாக்குக்கு சர்வதேச அளவிலான அணிகளுக்குப் பயிற்சி கொடுத்த அனுபவம் இல்லை. ஐபிஎல் போட்டியில் விளையாடும் பஞ்சாப் அணிக்குப் பயிற்சியாளராகப் பணியாற்றியதைத் தவிர சேவாக்குக்கு வேறு அனுபவம் கிடையாது. ஆனால், அவர் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருப்பது அனைவரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது. 

சேவாக் இந்திய அணி சார்பில், 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,586 ரன்களும், 251 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8,273 ரன்களும் எடுத்தார். அதிரடி ஆட்டக்காரராகவும், ஆட்டத்தின் போக்கை எளிதில் மாற்றக் கூடியவராகவும் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் அறியப்பட்டவர் சேவாக். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!