வெளியிடப்பட்ட நேரம்: 23:04 (01/06/2017)

கடைசி தொடர்பு:23:04 (01/06/2017)

#Champions Trophy: முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி

சாம்பியன்ஸ் ட்ராஃபி முதல் போட்டியில் வங்காள தேசத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது இங்கிலாந்து.

இங்கிலாந்து

Photo Courtesy: ICC

கிரிக்கெட்டின் 'மினி உலகக் கோப்பை' என்று அழைக்கப்படும் 'சாம்பியன்ஸ் ட்ராஃபி' போட்டி இன்று இங்கிலாந்திலுள்ள ஓவல் மைதானத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் தாய் மண்ணில் விளையாடும் இங்கிலாந்தை, வங்காள தேசம் எதிர்கொண்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து, வங்காள தேசத்தைப் பேட்டிங் செய்ய அழைத்தது. இதையடுத்து, முதல் இன்னிங்ஸில் வங்காள தேச அணி 6 விக்கெட்டுகளை இழந்து 305 ரன்கள் குவித்தது. தமீம் இக்பால் நிதானமாக விளையாடி 142 பந்துகளுக்கு 128 ரன்களும் முஷ்ஃபிகர் ரஹீம் 79 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து 306 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய இங்கிலாந்து 47 .2 ஓவர்களில் 308 ரன்கள் குவித்து வெற்றிப் பெற்றுள்ளது. இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் 129 பந்துகளில் 133 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து கேப்டன் மார்கன் 75 ரன்களும் அலெக்ஸ் ஹேல்ஸ் 95 ரன்களும் குவித்தனர். நல்ல ஸ்கோர் குவித்தும் தோல்வியை தழுவியுள்ளது வங்காள தேச அணி.