வெளியிடப்பட்ட நேரம்: 05:46 (02/06/2017)

கடைசி தொடர்பு:07:51 (02/06/2017)

#Champions Trophy: ஆஸ்திரேலியாவை சமாளிக்குமா நியூஸிலாந்து!

இன்று நடைபெறும் சாம்பியன்ஸ் ட்ராஃபி இரண்டாவது ஆட்டத்தில், ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்கிறது நியூஸிலாந்து.

ஆஸி

கோப்பு படம்

'மினி உலகக் கோப்பை' என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை தொடர், நேற்று இங்கிலாந்தில் தொடங்கியது. நடப்பு சாம்பியனான இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட எட்டு அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றன. எட்டு அணிகளும் ஏ,பி என இருப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் இங்கிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகளும் பி பிரிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. இதனிடையே, நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் வங்காள தேசத்தை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து.

இந்நிலையில், இன்று எட்பாஸ்டனில் நடைபெறும் ஆட்டத்தில், நியூஸிலாந்து அணியும் ஆஸ்திரேலியா அணியும் மோதுகின்றன. ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை பேட்டிங், பௌலிங் என சகலத்திலும் வலுவாக உள்ளது. டேவிட் வார்னர், ஃபின்ச், ஸ்மித், மேக்ஸ்வெல், கிரிஸ் லின் என அதிரடி ஆட்டக்காரர்கள் ஆஸ்திரேலிய அணியில் நிறைந்துள்ளனர். நியூஸிலாந்தில் கப்டில், வில்லியம்சன், டெய்லர், ஆண்டர்சன் உள்ளிட்ட வீரர்கள் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு சவலாக விளங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா-பாகிஸ்தான் போல கிரிக்கெட் போட்டிகளில் பரமவைரியான ஆஸ்திரேலியாவும் நியூஸிலாந்தும் மோதும் இப்போட்டியில், பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.