வெளியிடப்பட்ட நேரம்: 13:19 (02/06/2017)

கடைசி தொடர்பு:13:28 (02/06/2017)

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு 'விண்டீஸ்' எனப் பெயர் மாற்றம்!

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் பெயர், 'விண்டீஸ்' (Windies) என்று மாற்றப்பட்டுள்ளது. நேற்று, இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. 


வெஸ்ட் இண்டீஸ் அணியின் 91-வது ஆண்டு விழா தொடங்கியுள்ளது. இதை முன்னிட்டு, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவுசெய்துள்ளது. இதுகுறித்து, பேசிய வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜானி கிரேவ்ஸ் கூறுகையில், 'இந்தப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளையும் முன்னேற்றத் திட்டமிட்டுள்ளோம். இன்னும் சில வருடங்களுக்கு, விளையாட்டு வீரர்களுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றத் திட்டமிட்டுள்ளோம். இதுதொடர்பாக, விரைவில் விவாதிக்க உள்ளோம். 2018-2023 ஆண்டுக்கான செயல் திட்டங்கள் விரைவில் வரையறுக்கப்படும்' என்று தெரிவித்தார். அப்போது, வெஸ்ட் இண்டீஸ் அணியின் பெயர் 'விண்டீஸ்' என்று அறிவிக்கப்பட்டது.