வெளியிடப்பட்ட நேரம்: 20:34 (02/06/2017)

கடைசி தொடர்பு:20:57 (02/06/2017)

வில்லியம்ஸன் சதம்... ஆஸ்திரேலியாவுக்கு 292 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நியூஸிலாந்து...!

சாம்பியன்ஸ் ட்ராஃபி கிரிக்கெட் தொடர், இங்கிலாந்தில் நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில், இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்நிலையில், இன்று நடந்து வரும் இரண்டாவது போட்டியில் நியூஸிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் மோதி வருகின்றன. 

டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பேட் செய்தது. ஆனால், அந்த அணி பேட் செய்து கொண்டிருக்கும் போது, மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி 46 ஓவர்களாக குறைக்கப்பட்டது. ஒரு பக்கம் மழை, சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தாலும் கேப்டன் வில்லியம்ஸனின் பொறுப்பான ஆட்டத்தால் நியூஸிலாந்து அணியின் ரன் ரேட் பாதிக்கப்படவில்லை. 

சிறப்பாக, ஆடிய வில்லியம்ஸன் 100 ரன்கள் அடித்தார். மேலும், ரோன்சி 65, டெய்லர் 46 ரன்கள் எடுத்தனர். இதனால், நியூஸிலாந்து அணி 44.5 ஓவர்கள் முடிவில் 291 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில் உட் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதையடுத்து, 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கவுள்ளது.