வெளியிடப்பட்ட நேரம்: 21:51 (02/06/2017)

கடைசி தொடர்பு:10:50 (03/06/2017)

கும்ப்ளேவுக்கு குட்- பை... இந்திய அணியின் பயிற்சியாளராகிறாரா சேவாக்?

சாம்பியன் டிராஃபி கிரிக்கெட் தொடர் தொடங்கியுள்ள நிலையில், பயிற்சியாளர் கும்ப்ளே - கேப்டன் கோலி இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. கும்ப்ளேவின் பணிக் காலம், சாம்பியன்ஸ் டிராஃபியுடன் முடியவுள்ள நிலையில், புதிய பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் பி.சி.சி.ஐ இறங்கியுள்ளது 

Sehwag


இதற்கு, இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் உள்ளிட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கிடையே, நெட் பயிற்சியில், கும்ப்ளே வந்ததால், கோலி வெளியேறியதாகக் கூறப்பட்டது. இப்படி இந்திய அணிக்குள் பல்வேறு குழப்பங்கள் நிலவிவரும் நிலையில், முன்னாள் கேப்டன் கங்குலி, இந்திய அணி வீரர்களைச் சந்தித்தார்.

இந்தச் சந்திப்புக்குப் பின், கும்ப்ளேவுக்கு இந்திய அணியின் பயிற்சியாளராகத் தொடர விருப்பமில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. சாம்பியன் ட்ராஃபி வரை அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க என்று கும்ப்ளேவுக்கு அட்வைஸ் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. முக்கியமாக, சாம்பியன்ஸ் ட்ராஃபிக்குப் பிறகு, சேவாக் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 

இந்தச் சர்ச்சைகளுக்கு நடுவே, நெட் பயிற்சியில் கோலிக்கு, கும்ப்ளே பந்து வீசுவது போன்ற ஒரு வீடியோவும் வெளியாகியுள்ளது. இதனால், இந்திய அணியில் தற்போது மோதல்கள் சரிசெய்யப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.