வெளியிடப்பட்ட நேரம்: 01:03 (03/06/2017)

கடைசி தொடர்பு:09:29 (03/06/2017)

#ChampionsTrophy: ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து போட்டி ரத்து!

இன்று, ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்துக்கு இடையே நடந்த சாம்பியன்ஸ் ட்ராஃபி போட்டி, மழை காரணமாகக் கைவிடப்பட்டுள்ளது.

ஆஸி

'மினி உலகக் கோப்பை' என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் ட்ராஃபி போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றுவருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என  எட்டு முன்னணி அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றன. முதல் போட்டியில், வங்காள தேசத்தைச் சந்தித்த இங்கிலாந்து அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. நேற்றைய போட்டியில், நியூஸிலாந்து அணியை எதிர்கொண்டது, ஆஸ்திரேலியா.

 முதலில் ஆடிய நியூஸிலாந்து, 45 ஓவர்கள் முடிவில் 291 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேன் வில்லியம்சன் 97 பந்துகளில் 100 ரன்கள் குவித்தார். இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா, 9 ஓவர்களில் 53 ரன்கள் குவித்தபோது மழை குறுக்கிட்டது. இதையடுத்து, மழை காரணமாக போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இன்று நடைபெறும் போட்டியில், தென்னாப்பிரிக்காவைச் சந்திக்கிறது, இலங்கை.