வெளியிடப்பட்ட நேரம்: 05:49 (03/06/2017)

கடைசி தொடர்பு:07:34 (03/06/2017)

#ChampionsTrophy: இன்று தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது இலங்கை

இன்று நடைபெறும் சாம்பியன்ஸ் ட்ராஃபி மூன்றாவது ஆட்டத்தில், தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது, இலங்கை.

sa

கோப்பு படம்

'மினி உலகக் கோப்பை' என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை தொடர், நேற்று இங்கிலாந்தில் தொடங்கியது. நடப்பு சாம்பியனான இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட எட்டு அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றன. எட்டு அணிகளும் ஏ,பி என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் இங்கிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகளும் பி பிரிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

இதனிடையே, இன்று லண்டனில் நடைபெறும் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியும் இலங்கை அணியும் மோதுகின்றன. இங்கிலாந்துடன் நடந்த தொடரை இழந்த தென்னாப்பிரிக்கா, சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் களமிறங்குகிறது. இலங்கை அணியைப் பொறுத்தவரை அம்லா, டி-வில்லியர்ஸ், மில்லர் போன்ற தென்னாப்பிரிக்க அதிரடி வீரர்களைக் கட்டுப்படுத்த, சிறப்பான பந்துவீச்சுடன் களமிறங்கத் திட்டமிட்டுள்ளது. இந்திய நேரப்படி, பிற்பகல் 3 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது.