வெளியிடப்பட்ட நேரம்: 21:04 (03/06/2017)

கடைசி தொடர்பு:21:04 (03/06/2017)

#ChampionsTrophy: இந்தியாவா? பாகிஸ்தானா?- அப்ரிடியின் சாய்ஸ் யார் தெரியுமா?

அப்ரீடி

வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் ட்ராஃபி கிரிக்கெட் போட்டி நடக்கவுள்ளது. மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் ட்ராஃபி கோப்பையின் நடப்பு சாம்பியனான இந்தியா தனது 'பரம எதிரி' பாகிஸ்தானை நீண்ட நாள்கள் கழித்து சந்திக்கிறது.

இந்நிலையில் ஷாகித் அப்ரீடி, 'இரு நாடுகளுக்கும் இடையில் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் ட்ராஃபி போட்டியில் இந்தியா வெற்றி பெற வாய்ப்பு உள்ளது' என்று ஓபனாக கூறியுள்ளார்.

அவர் மேலும், 'ஒரு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ரசிகனாக, எந்தவொரு நாட்டுக்கு எதிராகவும் என் அணிதான் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம்தான் இருக்கிறது. குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக. ஆனால், சமீப கால வரலாறு மற்றும் இந்திய அணியின் ஆழத்தை வைத்துப் பார்க்கும்போது, அவர்கள் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.' என்று கூறியுள்ளார். 

'விராட் கோலி தலைமையிலான இந்திய அணியின் பேட்டிங்கானது, எந்தவொரு பந்துவீச்சையும் சிதறடிப்பதற்கான திறமையைப் பெற்றுள்ளது. அவர்கள் பவுலிங்கும் டெப்தாக இருப்பதால், கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பும் இந்தியாவுக்கு இருக்கிறது.' என்று விவரித்துள்ளார்.