வெளியிடப்பட்ட நேரம்: 00:07 (04/06/2017)

கடைசி தொடர்பு:22:48 (04/06/2017)

#ChampionsTrophy: இம்ரான் தாஹிர் சுழலில் வீழ்ந்த இலங்கை!

இன்று நடைபெற்ற  சாம்பியன்ஸ் ட்ராஃபி 3-வது போட்டியில் இலங்கையை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது தென் ஆப்பிரிக்கா.

தென்

'மினி உலகக் கோப்பை' என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை தொடர், நேற்று இங்கிலாந்தில் தொடங்கியது. நடப்பு சாம்பியனான இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட எட்டு அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றன. எட்டு அணிகளும் ஏ,பி என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் இங்கிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகளும் பி பிரிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. இதனிடையே இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கையை எதிர்கொண்டது தென் அப்பிரிக்கா.

டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் குவித்தது. ஹஷிம் அம்லா 103 ரன்களும், டூ பிளெஸிஸ் 75 ரன்களும் குவித்தனர். இதை தொடர்ந்து 300 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இலங்கை, 44.3 ஓவர்களின் முடிவில் 203 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இலங்கை அணி தரப்பில் தரங்கா 57 ரன்களும், குசால் பெரெரா 44 ரன்களும் குவித்தனர். மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். தென் ஆப்பிரிக்கா வீரர் இம்ரான் தாஹிர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.