வெளியிடப்பட்ட நேரம்: 03:09 (04/06/2017)

கடைசி தொடர்பு:03:21 (04/06/2017)

#ChampionsLeague: ரொனால்டோ அசத்தல்... கோப்பையைத் தட்டிச் சென்றது ரியல் மாட்ரிட்!

இன்று நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் கோப்பை இறுதி ஆட்டத்தில் யுவென்டஸ் அணியை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியுள்ளது ரியல் மாட்ரிட்.

ரியல்

கால்பந்து விளையாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த தொடராக கருதப்படும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. ரியல் மாட்ரிட், அத்லட்டிகோ மாட்ரிட், யுவென்டஸ், பேயர்ன் முனிச் உள்ளிட்ட உலகின் தலை சிறந்த கால்பந்து க்ளப்கள் பங்கேற்ற இத்தொடரில் ரியல் மாட்ரிட் அணியும் யுவென்டஸ் அணியும் இறுதிப்போட்டியில் மோதின.

கார்டிப் லால்ஸில் நடந்த இப்போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளுமே தலா ஒரு கோல் அடித்தன. ஆட்டத்தின் 20-வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ரியல் மாட்ரிட் அணியின் கோல் கணக்கைத் துவக்கிவைத்தார். யுவென்டஸ் வீரர் மெண்ட்சூயிக் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து இரண்டாவது பாதியில் ரியல் மாட்ரிட் அணியின் கை ஓங்கியது. ரியல் மாட்ரிட் அணியின் கேஸிமீரோ 61-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதை தொடர்ந்து ரொனால்டோ 64-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணிக்காக 3-வது கோலை அடித்தார். மேலும் 90-வது நிமிடத்தில் அஸன்சியோ ஒரு கோல் அடித்தார். இதையடுத்து 90 நிமிடங்களின் முடிவில் 4-1 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றுள்ளது. தொடர்ந்து 2-வது முறையாக கோப்பையைக் கைப்பற்றியுள்ளது ரியல் மாட்ரிட்.