Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

#ChampionsTrophy: இன்று பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்திய அணி!

இன்று நடைபெறும் சாம்பியன்ஸ் ட்ராஃபி 4-து ஆட்டத்தில், பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது இந்தியா.

இந்தியா

'மினி உலகக் கோப்பை' என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை தொடர், நேற்று இங்கிலாந்தில் தொடங்கியது. நடப்பு சாம்பியனான இந்தியாவுடன்    ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட எட்டு அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றன. எட்டு அணிகளும் ஏ,பி என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் இங்கிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகளும் பி பிரிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

இதனிடையே, இன்று எட்பாஸ்டனில் நடைபெறும் போட்டியில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன. சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடரின் முதல் போட்டியை வெல்லும் முணைப்பில் இரு அணிகளும் களமிறங்கவுள்ளன. இதுவரை சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடரில் 3 போட்டிகளில் இவ்விரு அணிகளும் மோதியுள்ளன. இதில் பாகிஸ்தான் 2 போட்டிகளிலும் இந்தியா  1 போட்டியிலும் வென்றுள்ளது. 2 ஆண்டுகளுக்கு பின் இரு அணிகளும் மோதுவதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement