வெளியிடப்பட்ட நேரம்: 16:04 (04/06/2017)

கடைசி தொடர்பு:16:03 (04/06/2017)

'தெரியவில்லை என்றால் வதந்தி பரப்பாதீர்கள்!' - கேப்டன் கோலி பளார்!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, அணியின் பயிற்சியாளர் கும்ப்ளேவுடன் தனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று செய்தியாளர்கள் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுக்கும், கேப்டன் விராட் கோலிக்கும் இடையில் சச்சரவுகள் நிலவி வருவதாக பத்திரிகைகளில் செய்தி வெளியான வண்ணம் இருந்தது. இப்போது நடந்து வரும் சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு பின்னர் கும்ப்ளே, பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுகிறார். இதையடுத்து புதிய பயிற்சியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். அனைவரும் ஆச்சர்யப்படும் வகையில் முன்னாள் இந்திய கேப்டன் விரேந்திர் சேவாக், அந்தப் பணிக்கு விண்ணப்பம் செய்துள்ளார். 

சூழல் இப்படி இருக்கும் வேலையில் இந்தய அணி தனது 'பரம எதிரியான' பாகிஸ்தானை சாம்பியன்ஸ் ட்ராஃபி முதல் போட்டியில் இன்று சந்திக்கிறது. இந்தப் போட்டிக்கு முன்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கோலி, 'எங்களுடனும் எங்கள் அணியுடனும் பயணிக்காமலேயே பல செய்திகள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. அதில் கூறுவது போல் எந்தப் பிரச்னையும் அணியில் இல்லை. 

கும்ப்ளேவுடனான உறவில் எந்த சிக்கலும் இல்லை. அவருடனான மொத்த பயணமும் சிறப்பாகவே இருந்தது. அதைப் பற்றி நான் இதற்கு மேல் பேச விரும்பவில்லை. உங்களுக்கு ஒரு விஷயத்தைப் பற்றி தெரியவில்லை என்றால் அதைப் பற்றி வதந்தி பரப்பக் கூடாது.' என்று கறாராக பேசியுள்ளார் கோலி.