வெளியிடப்பட்ட நேரம்: 16:02 (04/06/2017)

கடைசி தொடர்பு:16:01 (04/06/2017)

#ChampionsTrophy: இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் மழையால் பாதிப்பு!

இந்தியா - பாகிஸ்தான் இடையே எட்க்பாஸ்டன் மைதானத்தில் இன்று சாம்பியன்ஸ் ட்ராஃபி கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் இந்தியா பேட்டிங் செய்து வந்தது. இந்திய அணி 9.5 ஒவர்கல் முடிவில் 46 ரன்கள் எடுத்து விக்கெட் இழக்காமல் விளையாடி வந்தது. இந்நிலையில், மைதானத்தில் மழை பெய்து வருவதால், ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் சார்பில் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியுள்ளனர். இந்தியாவின் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் ரவிச்சந்தர் அஸ்வின் இந்த போட்டியில் களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.