வெளியிடப்பட்ட நேரம்: 17:22 (04/06/2017)

கடைசி தொடர்பு:18:24 (04/06/2017)

#ChampionsTrophy- இந்தியாவின் இந்த பாசிடிவ் பிரச்னை பற்றி தெரியுமா?

சாம்பியன்ஸ் ட்ராஃபியின் நடப்பு சாம்பியனான இந்தியா இன்று பாகிஸ்தானுடன் தன் முதல் போட்டியில் விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கும், முகமது ஷமிக்கும்  ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இம்முறை பேட்டிங் மட்டுமல்ல பவுலிங்கும் வலுவாக இருப்பதுதான் இதற்குக் காரணம். வேகப்பந்து வீச்சாளர்களில் புவனேஷ்வர் குமார், பூம்ரா, உமேஷ் யாதவ் மற்றும் முகமது ஷமி இருக்கின்றனர். சுழற்பந்து வீச்சாளர்களைப் பொறுத்த வரையில் ரவிச்சந்திர அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜாவும் ஸ்க்வாடில் உள்ளனர். 

 

அனைத்து பவுலர்களும் டாப் ஃபார்மில் இருப்பதால், யாரை உட்கார வைப்பது யாரை விளையாட வைப்பது என்று பாசிடிவான குழப்பத்தில் இந்திய அணி உள்ளது. 

இந்நிலையில் இது குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, 'இந்த விஷயம் கடந்த 5, 6 நாள்களாக என் மனதில் குழப்பத்தை விளைவித்துக் கொண்டிருக்கிறது. ஏனென்றால், பயிற்சி போட்டிகளில் அனைத்து பவுலர்களும் மிகவும் நன்றாக பந்துவீசினர். பவுலிங் மிகவும் பேலன்ஸ்டாக இருக்கிறது. ஆனாலும், நாங்கள் விளையாடும் விக்கெட் மற்றும் மைதானத்தை வைத்துதான் பவுலர்களை தேர்வு செய்ய உள்ளோம்.' என்று கூறியுள்ளார். 

பாகிஸ்துனடனான போட்டியை இந்திய அணி எப்படி எதிர்கொள்ள உள்ளது என்ற கேள்விக்கு கோலி, 'நாங்கள் அவர்களுடன் அடிக்கடி விளையாடுவதில்லை. அவர்கள் நன்றாக விளையாடும் நாளன்று எந்த அணியை வேண்டுமானாலும் அவர்களால் வீழ்த்த முடியும். ஆனால், அதைப் பற்றியெல்லாம் நாங்கள் கவலைப்படப் போவதில்லை. நாங்கள் என்ன செய்ய முடியும் என்பதில் மட்டும்தான் எங்கள் கவனம் இருக்கும். நன்றாக விளையாடினால், எந்த அணியை வேண்டுமானாலும் வெற்றி பெற முடியும். அதில் மட்டும்தான் எங்கள் கவனம் இருக்கப் போகிறது' என்று தெளிவாக தெரிவித்துள்ளார் கேப்டன் கோலி.