வெளியிடப்பட்ட நேரம்: 18:10 (04/06/2017)

கடைசி தொடர்பு:18:10 (04/06/2017)

#ChampionsTrophy- தொடக்க வீரர்கள் அரை சதம்... வலுவான நிலையில் இந்தியா!

இந்தியா - பாகிஸ்தான் இடையே எட்க்பாஸ்டன் மைதானத்தில் இன்று சாம்பியன்ஸ் ட்ராஃபி கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் தொடக்க வீரர்களில் ஒருவரான ரோகித் ஷர்மா 71 பந்துகளில் அரை சதம் அடித்து, தொடர்ந்து களத்தில் ஆடி வருகிறார்.

இவரைத் தொடர்ந்து இன்னொரு தொடக்க வீரரான ஷிகர் தவானும் 48 பந்துகளில் அரை சதத்தைக் கடந்தார். இதையடுத்து தவான் 68 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து கேப்டன் கோலி களத்துக்கு வந்தார். இந்திய அணி 24.3 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்துள்ளது. முதலில் நிதானமாக ஆட்டத்தை ஆரம்பித்த இந்திய அணி, இப்போது பாகிஸ்தான் அணி பௌலர்களின் பந்துவீச்சை நாலா புறமும் சிதறடித்து வருகின்றனர். எப்படியும் 50 ஓவர்கள் முடிவில் இமாலய ஸ்கோர் அடிக்கும் நோக்கில் தீர்க்கமாக ஆடி வருகின்றனர் இந்திய பேட்ஸ்மேன்கள். ஆனால், மீண்டும் மழை குறுக்கிட்டுள்ளது.