வெளியிடப்பட்ட நேரம்: 21:50 (04/06/2017)

கடைசி தொடர்பு:21:46 (04/06/2017)

சாம்பியன் பட்டம் வென்றார் சாய் ப்ரணீத்

sai

தாய்லாந்து ஓபன் கிராண்ட் ஃப்ரீ கோல்டு பேட்மின்டனில் இந்திய வீரர் சாய் ப்ரணீத் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இறுதிப்போட்டியில் இந்தோனேஷிய வீரர் ஜோனதன் கிறிஸ்டியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் சாய் ப்ரணீத். ஜோனதன் கிறிஸ்டியை 17-21, 21-18, 21-19 என்ற செட்களில் சாய் ப்ரணீத் வென்றார்.

இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீராங்கனை சாய்னா நேவால் அரையிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறினார். அதனால், இந்திய பேட்மின்டன் ரசிகர்களின் ஒரே நம்பிக்கையாக சாய் ப்ரணீத் மட்டும் இருந்தார். அரையிறுதிப்போட்டியில் சாய், பன்னாவிட் என்ற தாய்லாந்து வீரரை வீழ்த்தினார். 21-11, 21-15 என்ற நேர் செட்களில் தாய்லாந்து வீரரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சாய் ப்ரணீத். தற்போது, இறுதிப்போட்டியில் இந்தோனேஷிய வீரர் ஜோனதன் கிறிஸ்டியை வீழ்த்தி வெற்றி வாகை சூடியுள்ளார் சாய் ப்ரணீத்.