நொறுக்கி எடுத்த இந்தியா: டக்வர்த் லூயிஸ் முறையில் 324 ரன்கள் இலக்கு

rohit

சாம்பியன்ஸ் டிராஃபியின் இன்றைய போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை செய்து வருகிறது. எட்க்பாஸ்டன் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. ஆட்டத்தின் இடையிடையே மழை குறுக்கிட்டது. இதனால், போட்டி 48 ஓவர்களுக்கு குறைக்கப்பட்டது. தொடக்க வீரர்களில் ஒருவரான ரோகித் ஷர்மா 119 பந்துகளில் 91 ரன்கள் குவித்தார், மற்றொரு தொடக்க வீரரான தவான், 65 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். அடித்து விளையாடிய யுவராஜ் சிங் 32 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். இறுதி வரை களத்தில் இருந்த கேப்டன் கோலி, 68 பந்துகளில் 81 ரன்கள் விளாசினார். 

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 48 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்தியா 319 ரன்கள் குவித்துள்ளது. இறுதி ஓவரில் மட்டும் 3 சிக்ஸர் விளாசினார் பாண்டியா. பாகிஸ்தான் தரப்பில், ஹசன் அலி, ஷதாப் கான் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர். பாகிஸ்தானுக்கு, டக்வர்த் லூயிஸ் முறையில் 324 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!