வெளியிடப்பட்ட நேரம்: 13:08 (05/06/2017)

கடைசி தொடர்பு:07:21 (06/06/2017)

#ChampionsTrophy2017 : யுவராஜ் தன் ஆட்டத்தை யாருக்கு டெடிகேட் செய்தார் தெரியுமா?

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அடித்து விளாசிய யுவராஜ் சிங், தன் ஆட்டத்தைப் புற்றுநோய்க்கு எதிராகப் போராடிய, போராடிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் அர்ப்பணிப்பதாகத் தெரிவித்துள்ளார். 

Yuvraj singh
 

இங்கிலாந்தில் ஜூன் 1 முதல் 18 வரை சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இத்தொடரின் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி நேற்று நடந்து முடிந்தது. பாகிஸ்தானுக்கு எதிரான இந்தக் கிரிக்கெட் போட்டியில் இந்தியா சிறப்பாக விளையாடி பாகிஸ்தானைத் தோற்கடித்தது.

 

இந்தப் போட்டியில் அசத்தலாக விளையாடிய யுவராஜ் சிங் 32 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். ஆட்டநாயகன் விருதும் பெற்றார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவு செய்துள்ள யுவராஜ் ‘ஒவ்வொர் ஆண்டும் ஜூன் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை புற்றுநோய்க்கு எதிராகப் போராடியவர்கள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. #CancerSurvivorDay அன்று நான் விளையாடிய இந்த இன்னிங்ஸை புற்றுநோயை வென்று வாழ்ந்துக் கொண்டிருப்பவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன். லண்டன் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என் பிரார்த்தனைகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ இவ்வாறு நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார் யுவராஜ்.
 


யுவராஜ் சிங்கும் புற்றுநோயை வென்ற ரியல் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது! 
 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க