வெளியிடப்பட்ட நேரம்: 00:25 (06/06/2017)

கடைசி தொடர்பு:00:24 (06/06/2017)

மூன்று நாடுகள் ஹாக்கி : பெல்ஜியத்தை வீழ்த்தியது இந்தியா...!

இந்தியா, பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய மூன்று நாடுகள் மோதும் ஹாக்கிப் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு நடந்தப் போட்டியில் இந்தியா - பெல்ஜியம் அணிகள் மோதின. ஏற்கெனவே முந்தையப் போட்டியில் பெல்ஜியம் அணியிடம் தோல்வியடைந்திருந்ததால், இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்கியது.

Hockey


ஆட்டத்தின் 13-வது நிமிடத்திலேயே முதல் கோல் போட்டு கெத்து காட்டியது பெல்ஜியம். இதனால் இந்திய அணி கோல் போடுவதில் தீவிரம் காட்டியது. இதையடுத்து, 34 மற்றும் 38 நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார் ஹர்மன்ப்ரீத் சிங். 2-1 என்ற இந்தியா முன்னிலை வகிக்க, 45-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்தது பெல்ஜியம்.


இதனால் ஆட்டத்தில் அனல் பறந்தது. 49-வது நிமிடத்தில் இந்தியாவின் ராமன்தீப் சிங் மற்றொரு கோல் அடித்து அசத்தினார். இதன் காரணமாக 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.  இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 1 வெற்றி 1 தோல்வி, 1 போட்டி டிராவில் முடிந்துள்ளது.


இந்திய அணி தனது அடுத்தப் போட்டியில் ஜெர்மனி அணியுடன் மோத உள்ளது.