வெளியிடப்பட்ட நேரம்: 00:12 (07/06/2017)

கடைசி தொடர்பு:00:12 (07/06/2017)

#ChampionsTrophy: இந்தியாவுடன் வாழ்வா சாவா ஆட்டம்... இலங்கைக்கு சங்ககாரா அட்வைஸ்!

சாம்பியன்ஸ் கோப்பை ஆட்டத்தில் இந்தியாவை எதிர்கொள்ளும் இலங்கை அணி, ஆக்ரோஷத்துடன் ஆட வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்ககாரா கூறியுள்ளார்.

சங்கா

மினி உலக கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 8 முன்னணி அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியனான இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தானை மிக எளிதாக வீழ்த்தியது. இதனிடையே முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவிடம் படு தோல்வியடைந்தது இலங்கை. எனவே இந்தியாவுடன் நடக்கும் போட்டியில் வென்றால் தான் இலங்கை அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைத்துக் கொள்ள முடியும்.

இந்நிலையில் வியாழன் அன்று நடைபெறும் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும் இலங்கை அணிக்கு அறிவுரை வழங்கியுள்ளார் இலங்கை முன்னாள் வீரர் சங்ககாரா. இது குறித்து அவர் கூறுகையில், 'ஓவல் மைதானத்தில் இலங்கை அணி வீரர்கள் ஆக்ரோஷத்துடன் விளையாட வேண்டும். இளம் வீரர்களின் ஆற்றம் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளபட வேண்டும்' என அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானை வென்று தன்னம்பிக்கையுடன் உள்ள இந்திய அணியை வீழ்த்துவது சுலபமான விஷயமல்ல' எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.