வெளியிடப்பட்ட நேரம்: 01:04 (07/06/2017)

கடைசி தொடர்பு:10:42 (07/06/2017)

#ENGvNZ சாம்பியன்ஸ் டிராபி : அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்டில், குரூப்-ஏ பிரிவில் நேற்று நடந்த போட்டியில், இங்கிலாந்து - நியூஸிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, 310 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரூட் 64, பட்லர் 61 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து, 311 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் சொதப்பினர்.

England


கேப்டன் வில்லியம்ஸன் தவிர, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால், அந்த அணி 44.3 ஓவர்களில் 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வில்லியம்ஸன் 87 ரன்கள் எடுத்தார். இதனால், 87 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. இங்கிலாந்து அணி தரப்பில் பிளங்கெட் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.


இந்த வெற்றியின்மூலம் இங்கிலாந்து அணி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. குரூப்-ஏ பிரிவில், அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் அணி இங்கிலாந்து என்பது குறிப்பிடத்தக்கது.