வெளியிடப்பட்ட நேரம்: 20:08 (07/06/2017)

கடைசி தொடர்பு:20:08 (07/06/2017)

#FrenchOpen: ஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வி!

பிரெஞ்சு ஓப்பன் காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரிய வீரர் டோமினிக் தைமிடம் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார் ஜோகோவிச். 

ஜோக்கோவிச்

Pic Courtesy: ESPN

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஃப்ரெஞ்சு ஓப்பன் டென்னிஸ் போட்டி, பாரிஸில் நடைபெற்றுவருகிறது. இதில் நடால், ஜோகோவிச், வீனஸ் வில்லியம்ஸ், ஆண்டி முர்ரே, வாவ்ரிங்கா உள்ளிட்ட பிரபல வீரர்கள் பங்கேற்றுள்ளனர். லீக் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், காலிறுதி ஆட்டங்கள் தற்போது தொடங்கியுள்ளன.

இதனிடையே இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் முன்னணி வீரர் ஜோகோவிச்சை எதிர்கொண்டார் ஆஸ்திரிய வீரர் டோமினிக் தைம். மூன்று செட்டுகள் நடந்த இப்போட்டியில், ஜோகோவிச்சை 7-6, 6-3, 6-0 என்ற நேர் செட்களில் வீழ்த்தியுள்ளார் டோமினிக் தைம். இதையடுத்து 9 முறை பிரெஞ்சு ஓப்பன் சாம்பியன் பட்டம் வென்ற ரஃபேல் நடாலை, அரையிறுதி ஆட்டத்தில் சந்திக்கிறார் தைம்.