Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐ.சி.சி-யின் புதிய விதிமுறை... ப்ளஸ், மைனஸ் என்ன?

இந்திய அணியில் என்றுமே ரோஹித் சர்மாவின் நம்பகத்தன்மையின் மேல் கிரிக்கெட் ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருவது வழக்கம். அவரது கன்சிஸ்டன்சி அப்படி. ஒரு ஆட்டத்தில் அபாரமாக ஆடினாலும் அடுத்த ஆட்டத்தில் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்துவிடுவார். இந்நிலையில் காயத்தினால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணியில் இடம்பிடித்த அவர், சாம்பியன்ஸ் டிராபியில் முதல் ஆட்டத்தில், பாகிஸ்தானுக்கு எதிராக 91 ரன்கள் அடித்து தன் திறமையைக் காட்டினார். முதலில் மிகவும் நிதானமாக ஆடிய அவர், கடைசி நேரத்தில் விஸ்வரூபம் எடுத்தார். ஆனாலும், கடைசியில் ரன் அவுட் ஆனார். 119 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து சதத்தையும் தவறவிட்டார். இங்கிலாந்து மண்ணில் இது அவரது முதல் சதமாக இருந்திருக்கும். 

ரோகித் அவுட் - ஐசிசியின் விதிமுறை

இவரது ரன் அவுட் அக்டோபர் மாதத்துக்குப் பிறகு நடந்திருந்தால் புதிய விதிமுறைகளின் படி, அவுட்இல்லை என்றிருந்திருக்கும். 37-வது ஓவரில் விராட் கோலி ஒரு ரன்னுக்கு ரோஹித் சர்மாவை அழைக்க, அவரும் ஸ்ட்ரைக்கர் எண்டுக்கு ஓடினார். பாபர் அஸ்மான் ஸ்டம்ப்களைத் தவறவிட்டாலும் விக்கெட் கீப்பர் பந்தை பிடித்து ரன் அவுட் செய்தார். முழு வீச்சாக டைவ் அடுத்திருந்த ரோஹித் சர்மாவின் பேட் பின்புறம் தரையில் தட்டி கிரீஸ் கோட்டுக்கு மேலே சென்றது. பேட் தரையில் இல்லாததால் அவுட் கொடுக்கப்பட்டது. ரோஹித் சர்மாவின் சத வாய்ப்பு நழுவியது.

இதற்குக் காரணம் தற்போது நடைமுறையில் இருக்கும் ஐ.சி.சி-யின் விதிமுறை. எம்.சி.சி கிரிக்கெட் விதிமுறை 29-வது (a) பிரிவில் 'ஒரு பேட்ஸ்மேனின் பேட்டோ அல்லது அவர் உடலின் ஏதாவது ஒரு பகுதியோ கிரீஸ் கோட்டை தாண்டி தரையில் இருந்தால் மட்டுமே அவர் safe. இல்லாவிடில் அவர் அவுட்தான்' என்று குறிப்பிடுகிறது. இதனால்தான் இப்போது ரோஹித் சர்மா அவுட் கொடுக்கப்பட்டார். 

ஆனால் அக்டோபரில் நடைமுறைக்கு வரும் புதிய விதிமுறையின்படி ‘பௌன்சிங் பேட்’ ரன் அவுட்கள் நாட் அவுட் என்றே கருத்தப்படுமாம். அதாவது ‛கிரீஸைத் தாண்டிய பின் வீரர் தரையுடன் தொடர்பை விட்டாலோ, இல்லை டைவ் அடிக்கும்போது கோட்டை தாண்டிய பின் பேட் தரையில் இல்லை என்றாலோ நாட் அவுட் கொடுக்கப்படும்’ என்கிறது புதியவிதிமுறை.

அக்டோபர் மாதத்துக்குப் பின்பே இந்த விதிமுறைகளைப் பற்றி தெளிவுவரும். புதிய விதிமுறைகளில் பேட் சைஸ், பேட் தடிமன் போன்றவற்றுக்கு எல்லைகள் விதிக்கப்பட்டுள்ளது. காயங்களைத் தவிர்க்க பெயில்ஸ், ஸ்டும்ப்புடன் கயிறால் கட்டப்படும். மைதானத்தில் வீரர்களின் ஒழுங்குமுறைகள் தீவிரமாக பார்க்கப்படும். ஒரு வீரரை மைதானத்தை விட்டு வெளியேற்றும் அதிகாரம் நடுவர்களுக்கு கொடுக்கப்படும். எதிரணி வீரர் மீது வேண்டுமென்றே பந்தை எறிவது, அம்பயர் உடன் சண்டையிடுவது போன்ற செயல்களுக்கு 5 ரன்கள் பெனால்டி தரப்படும். வன்முறையில் ஈடுபட்டால் கண்டிப்பாக அவர் வெளியேற்றப்படுவார்.

மேலும் பந்து வீசும்போதே எதிரணி What s பேட்ஸ்மேனை ரன் அவுட் செய்யும் ‘மன்காட்’ முறை தெளிவுபெறும். பெண்களை ஆதரிக்க பாலினத்திற்கு பொதுவான வார்த்தைகள் பயன்படுத்தப்படும். பேட்ஸ்மேன் என்ற வார்த்தையை தவிர. இது இரு பாலினத்திற்கும் பொதுவானது.

இந்த விதிமுறைகள் 2000-க்குப் பின் இப்போதுதான் மாறுகிறது. இந்த புதிய விதிமுறைகளுக்கு வீரர்கள் மட்டுமல்ல ரசிகர்களும் பழகியாக வேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement